தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இருதய தினத்தை முன்னிட்டு முன்னாள் மாணவர்கள் நடத்திய மாரத்தான் போட்டி! - இருதய தினத்தை முன்னிட்டு முன்னாள் மாணவர்கள் நடத்திய மாரத்தான் போட்டி!

திருச்சி: மணப்பாறையில், உலக இருதய தினத்தை முன்னிட்டு தியாகேசர் ஆலை மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர்களும், தனியார் மருத்துவமனையும் இணைந்து மாரத்தான் போட்டி நடத்தியது.

இருதய தினத்தை முன்னிட்டு, மாணவர்கள் நடத்திய மாரத்தான் போட்டி

By

Published : Aug 26, 2019, 10:41 AM IST

Updated : Aug 26, 2019, 5:42 PM IST

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உலக இருதய தினத்தை முன்னிட்டு முன்னாள் மாணவர்கள் மாரத்தான் போட்டி நடத்தினர். இதில் 21 கி.மீ, 5 கி.மீ, 4 கி.மீ, 3 கி.மீ என தனித்தனியாக நான்கு பிரிவுகளின் கீழ் போட்டியானது நடைபெற்றது. இதில் பெண்கள், குழந்தைகள் என மூன்றாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் 21 கிலோமீட்டர் போட்டியில் ஆண்கள் பிரிவில் திருநெல்வேலியைச் சேர்ந்த பசுபதியும், பெண்கள் பிரிவில் மணப்பாறையைச் சேர்ந்த கலைச்செல்வியும் முதலிடம் பிடித்தனர். இதேபோல் ஐந்து, நான்கு மற்றும் மூன்று கிலோ மீட்டர் உள்ளிட்ட பிரிவுகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு சான்றிதழும், பரிசுகளும் வழங்கப்பட்டன.

இப்போட்டியில் சென்னை, திருநெல்வேலி, விழுப்புரம், ஊட்டி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து வந்திருந்த வீரர்கள் கலந்து கொண்டனர்.

Last Updated : Aug 26, 2019, 5:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details