தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'தமிழ்நாட்டில் பறவை காய்ச்சல் இல்லை' - சுகாதாரத் துறை செயலாளர்!

திருச்சி: தமிழ்நாட்டில் பறவை காய்ச்சல் இல்லை என சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்

திருச்சி
திருச்சி

By

Published : Jan 14, 2021, 10:44 PM IST

தமிழ்நாடு சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன், திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள கரோனா தடுப்பூசி மையத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தமிழ்நாட்டில் கரோனா பரவல் எண்ணிக்கை வெகுவாக குறைந்ததுள்ளது. இதற்கு காரணம் மருத்துவம் சாரா தடுப்பு பணியை பின்பற்றியதுதான். தடுப்பூசி ஜனவரி 16ஆம் தேதி முதற்கட்டமாக 160 பேருக்கு செலுத்தப்படும். இந்தியாவில் 3 ஆயிரம் பேருக்கு செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 4 லட்சத்து 39 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர். சுய விருப்பம் உள்ளவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்படும். இது கட்டாயம் கிடையாது. கரோனா தடுப்பூசி எனும் மைல்கல்லை நாம் எல்லோரும் வரவேற்க வேண்டும். தடுப்பூசி குறைவாக உள்ளதால், அவசியமாக தேவைப்படுபவர்களுக்கு முதலில் செலுத்தப்படுகிறது. அதற்கான பதிவுகள் நடைபெறுகிறது.

தடுப்பூசியை இலவசமாக கொடுக்க தமிழ்நாடு அரசு கொள்கை முடிவு செய்துள்ளது. அரசு மருத்துவமனைகளுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும். அடுத்தகட்டமாக தனியார் மருத்துவமனைகளுக்கும் வழங்கப்படும். தமிழ்நாட்டில் பறவைக் காய்ச்சல் இல்லை. இருப்பினும் அதற்கு தேவையான மருந்துகள் கையிருப்பு உள்ளது. இந்த வகை பறவை காய்ச்சல் மனிதருக்கு பரவக்கூடியது இல்லை” எனத் தெரிவித்தார்.

ஆய்வின்போது திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, மருத்துவமனை டீன் வனிதா, ஆர்எம்ஒ எட்வினா, டாக்டர் ஏகநாதன் ஆகியோர் உடனிருந்தனர்

ABOUT THE AUTHOR

...view details