தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைமையாசிரியர்கள் ஆர்ப்பாட்டம் - நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்

திருச்சி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகம் சார்பில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Headmasters shout at various demands!
Headmasters shout at various demands!

By

Published : Feb 9, 2020, 10:28 PM IST

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகம் சார்பில் திருச்சி பேருந்து நிலையம் அருகே கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தலைமை ஆசிரியர்கள் கழக மாநில தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், 100க்கும் மேற்பட்ட மாநில நிர்வாகிகள் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், புதிய கல்விக் கொள்கையை கைவிட வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள கணினி ஆசிரியர் பணியிடத்தை மேல்நிலை கல்வி பொதுத்தேர்வை கருத்தில் கொண்டு உடனடியாக நிரப்ப வேண்டும் என கோரிக்கைகளை விடுத்தனர்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைமையாசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

மேலும், ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பணியாளர்கள் மீது போடப்பட்டுள்ள 17பி ஒழுங்கு நடவடிக்கைகள், பணி மாறுதல்களை ரத்து செய்ய வேண்டும் எனவும், மத்திய அரசுப் பள்ளி முதல்வர்களுக்கு இணையான ஊதியத்தை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: ‘எங்களைப் போல் வெட்க மானம் பார்க்காமல் இருங்கள்’ - சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு அமைச்சர் அறிவுரை

ABOUT THE AUTHOR

...view details