தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘கணினி ஆசிரியர்கள் இல்லை’ - தலைமையாசிரியர்கள் கண்டனம்!

திருச்சி: மேல்நிலைப் பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் நியமனம் செய்யாதது கண்டிக்கத்தக்கது என தலைமை ஆசிரியர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

By

Published : Jan 5, 2020, 11:38 PM IST

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கழக மாநில நிர்வாகிகள் குழுக் கூட்டம் திருச்சி சையது முத்தர்ஸா மேல்நிலைப்பள்ளியில் மாநிலத் தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. பொதுச் செயலாளர் ஞானசேகர், அமைப்புச் செயலாளர் சேகர் உள்பட மாநிலம் முழுவதும் இருந்து நிர்வாகிகள் பலர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில், ‘மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மீது பள்ளிக் கல்வித் துறையின் நிர்வாக ரீதியான தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும். கணினி ஆசிரியர்கள் பணியிடம் நீண்ட நாட்களாக காலியாக உள்ளது. பலமுறை வலியுறுத்தியும் இந்த பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

தலைமை ஆசிரியர்கள் சங்கம் தீர்மானம்

மேல்நிலைப்பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களின் பணிச்சுமையை கூடுதலாக உயர்த்தும் நடவடிக்கையை பள்ளிக் கல்வித் துறை கைவிடவேண்டும். மேல்நிலைப் பள்ளிகளில் கடைநிலை ஊழியர்கள் பணியிடங்களைக் குறைக்கும் அரசு உத்தரவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்’ உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதையும் படிங்க:

அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை - வானிலை ஆய்வு மையம்!

ABOUT THE AUTHOR

...view details