திருச்சியில் ஆயுதப்படை தலைமைக் காவலராக பணிபுரிபவர் அருளானந்தன். இவர் தமிழ்நாடு டிஜிபி திரிபாதிக்கு உருக்கமான ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவர் 1997ஆம் ஆண்டில் தொகுதிப் பிரிவில் காவலராக பணிக்குச் சேர்ந்ததாகவும், ஆனால் தனக்குப் பின் 1999ஆம் ஆண்டு பணிக்குச் சேர்ந்த காவலரை உதவி ஆய்வாளராகப் பதவி உயர்வு வழங்கியுள்ளது எந்த வகையில் நியாயம் என்றும் உருக்கமாகக் கேட்டுள்ளார்.
பதவி உயர்வில் முறைகேடு? - தலைமைக் காவலர் ஆடியோ வெளியீடு - டிஜிபி திரிபாதி
திருச்சி: காவலர்களுக்குப் பதவி உயர்வு வழங்குவதில் முறைகேடு நடைபெறுவதால், உரிய நடவடிக்கை எடுக்கக்கேரி திருச்சி தலைமைக் காவலர் ஒருவர் உருக்கமான ஆடியோவை வெளியிட்டுள்ளார்.
தலைமைக் காவலர் வெளியிட்ட ஆடியோ
மேலும், கடந்த 22 ஆண்டுகளாக அயராமல் நேர்மையாக பணிபுரிந்த தனக்குப் பதவி உயர்வு வழங்காமல் இருப்பது வேதனையை ஏற்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதற்கு முறையான நடவடிக்கையை டிஜிபி திரிபாதி எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைவிடுத்துள்ளார்.