தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருச்சியில் ரூ.7.5 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல்!

திருச்சி: திருச்சியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் 7.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா பொருட்கள் சிக்கியது.

குட்கா பறிமுதல்

By

Published : Apr 12, 2019, 6:54 PM IST

திருச்சி-சென்னை சாலை ரோட்டில் உள்ள பழைய பால் பண்ணை அருகே திருச்சி கிழக்கு தாசில்தார் ரேணுகா தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஓசூரில் இருந்து திருச்சி நோக்கி கண்டெய்னர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அதை பறக்கும் படையினர் நிறுத்தி சோதனையிட்டனர்.

லாரியில் 50 மூட்டைகளில் ரூ.7.5 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் மற்றும் புகையிலைப் பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள், காந்தி மார்க்கெட் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் காளிதாஸ் என்பவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details