தமிழ்நாடு குவாங்கிடோ சங்கத்தின் சார்பில் ஒரு நாள் குவாங்கிடோ தற்காப்பு கலை பயிற்சி முகாம் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. பயிற்சி முகாமிற்கு சங்கத்தின் மாநில பொதுச்செயலாளரும், பயிற்சியாளருமான கந்தமூர்த்தி தலைமை வகித்தார்.
முகாமில் திருச்சி, தஞ்சை, வேலூர், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட வீரர் - வீராங்கனைகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
குவாங்கிடோ தற்காப்பு கலையின் தேசிய போட்டிக்கான வீரர்கள் தேர்வு அதைத்தொடர்நது, வரும் ஜனவரி மாதம் அரியானா மாநிலம் உரை மகரிஷி பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான குவாங்கிடோ போட்டியில் பங்கேற்பதற்கான வீரர்கள் தேர்வும் நடைபெற்றது. பயிற்சி முகாமில் கலந்து கொண்ட பயிற்சி பெற்ற வீரர் - வீராங்கனைகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: சேலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான குதிரை ஏறும் போட்டிகள்..!