திருச்சி:திருச்சி மாவட்டம்,கிராப்பட்டியைச் சேர்ந்தவர், ரவி (52). கத்தார் நாட்டிலுள்ள வசந்தபவன் ஹோட்டலில், கடந்த 15 ஆண்டுகாலம் மேற்பார்வையாளராகப் பணியாற்றியுள்ளார். அந்த வேலையைவிட்டுவிட்டு திருச்சிக்கு வந்து மனைவி மற்றும் இருமகள்களுடன் வாழ்ந்துவருகிறார். ரவியைத் தொடர்ந்து, மேலும் இரண்டு ஊழியர்கள் வேலையை விட்டுவிட்டு தமிழ்நாட்டுக்கு வந்திருக்கின்றனர்.
ஊழியர்கள் தொடர்ந்து வேலையை விட்டுச்செல்வதால் வசந்தபவன் உரிமையாளர் ராஜேந்திரன் மன வேதனையடைந்துள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொதுச்செயலாளர் கோவிந்தராஜூலுவிடம், வசந்தபவன் உரிமையாளர் ராஜேந்திரன் தனது வேதனையைத் தெரிவித்திருக்கிறார்.
பின்னர் இவர்கள் திட்டமிட்டு, கத்தார் நாட்டில் வசந்தபவன் ஹோட்டலில் மூன்றரை கோடி ரூபாய் முறைகேடு செய்துவிட்டதாக ரவி மீது குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்நிலையில், திருச்சியில் உள்ள குரு ஹோட்டலுக்கு ரவி மற்றும் அவரது மனைவியை அழைத்து தனியறையில் அடைத்து வைத்து, பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.