சென்னை:Holiday for Pongal:பொங்கலுக்கு ஐந்து நாள்கள் தொடர் விடுமுறை அறிவிப்பதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ள சம்பவம் பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், 'தமிழ்நாட்டில் கரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஜனவரி 7ஆம் தேதி முதல், இரவு நேர ஊரடங்கும் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கும் நடைமுறையில் உள்ளது.
இந்நிலையில், 14.01.2022 (வெள்ளிக்கிழமை) பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பணியாளர்கள் தங்களது சொந்த ஊருக்குச் சென்று பண்டிகையை மகிழ்வுடன் கொண்டாட ஏதுவாகவும், 16.01.2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் நிலையிலும், 18.01.2022, தைப்பூசத் திருநாள் அன்று அரசு விடுமுறையானதாலும், இடைப்பட்ட நாளான 17.01.2022 (திங்கட்கிழமை) அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்குமாறு பணியாளர்கள் சங்கங்களிடமிருந்து அரசுக்கு கோரிக்கைகள் வரப்பெற்றன.