தமிழ்நாட்டில் கரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. இதன் காரணமாக தினமும் புதிதாக 5,000 பேர் கரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
கல்லூரி மாணவர்களுக்கு கரோனா தொற்று: மூடப்பட்ட அரசு பொறியியல் கல்லூரி - கல்லூரி மாணவர்களுக்கு கரோனா
திருச்சி: அரசு பொறியியல் கல்லூரியில் 15 மாணவர்களுக்கு கரோனா தொற்று உறுதியானதையடுத்து கல்லூரி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
![கல்லூரி மாணவர்களுக்கு கரோனா தொற்று: மூடப்பட்ட அரசு பொறியியல் கல்லூரி Government Engineering College](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-11037344-1013-11037344-1615915195751.jpg)
திருச்சி மாவட்டம், சேதுராப்பட்டியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வந்தது. இந்நிலையில் இங்கு பயின்ற 15 மாணவர்கள் காய்ச்சல், சளி தொந்தரவு காரணமாக மருத்துவமனையில் முன்னதாக அனுமதிக்கப்பட்டனர். அவர்களை பரிசோதித்தபோது அவர்களுக்கு கரோனா அறிகுறி இருப்பது தெரியவந்தது.
கரோனா வைரஸ் தொற்று உறுதியானதைத் தொடர்ந்து சேதுராப்பட்டி அரசு பொறியியல் கல்லூரி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. விடுதிகளில் தங்கியிருந்த மாணவர்களும் உடனடியாக வீடு திரும்ப கல்லூரி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.