திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றியவர் கிஷோர் பிரியதர்ஷன். இவர் இன்று காலை தனது மாமியாரின் அம்மாவிற்கு திதி கொடுப்பதற்காக ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்திற்கு வந்துள்ளார். அப்போது காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற கிஷோர் பிரியதர்ஷன் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
காவிரி ஆற்றில் மூழ்கி அரசு மருத்துவர் உயிரிழப்பு - காவிரி ஆற்றில் மூழ்கி அரசு மருத்துவர் உயிரிழப்பு
திருச்சி: ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் திதி கொடுக்க வந்த அரசு மருத்துவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
death
இது குறித்து தகவலறிந்த ஸ்ரீரங்கம் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த கிஷோர் பிரியதர்ஷனின் உடலை மீட்டனர். இதனையடுத்து ஸ்ரீரங்கம் காவல் துறையினர் கிஷோர் பிரியதர்ஷனின் உடலை உடற்கூராய்வுக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.