திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே முருங்கை ஊராட்சி மருதம்பட்டியில் செல்லாண்டியம்மன், மாரியம்மன் கோயில்கள் உள்ளன. இந்நிலையில் அர்ச்சகர் வழக்கம்போல்இரவு கோயிலைபூட்டிவிட்டு வீட்டிற்குச் சென்றுள்ளார்.
திருச்சியில் அம்மன் கழுத்தில் இருந்த தங்க தாலி திருட்டு! - திருச்சி
திருச்சி: தொட்டியம் அருகே மருதம்பட்டி கிராமத்தில் அம்மன் கழுத்தில் இருந்த தங்க தாலியைத் திருடிச் சென்ற நபர்களை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.
பின்பு காலையில் கோயிலை திறக்க வந்தபோது, கோயிலின் முன்பக்க திறந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது செல்லாண்டி அம்மன் கோயிலில் அம்மன் கழுத்திலிருந்த தங்க தாலியை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. அதோடு கோயிலிலிருந்த சரவிளக்கு, தீப விளக்கு, மணி, இரண்டு பித்தளை குடங்களும் திருடு போயிருந்தது.
இதையடுத்து கட்டுப்புத்துார் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. காவல் துறையினர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை தேடி வருகின்றனர்.