தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கிரைண்டரில் மறைத்து வைத்து தங்கம் கடத்தியவர் கைது - விமானம் மூலம் தங்கம் கடத்தல்

திருச்சி விமான நிலையத்தில் கிரைண்டர் மோட்டாரில் மறைத்து வைத்து தங்கம் கடத்தி வந்தவரை சுங்கத்துறை அலுவலர்கள் கைது செய்துள்ளனர்.

கிரைண்டரில் மறைத்து வைத்து தங்கம் கடத்தல்
கிரைண்டரில் மறைத்து வைத்து தங்கம் கடத்தல்

By

Published : Jun 9, 2022, 6:36 PM IST

திருச்சியில் இருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு நாள்தோறும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் தங்கத்தை மறைத்துக் கடத்தி வருவதும், அதனை சுங்கத்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது.

கிரைண்டரில் மறைத்து வைத்து தங்கம் கடத்தல்

இந்நிலையில் மலேசியத்தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் திருச்சி விமான நிலையத்திற்கு வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அலுவலர்கள் சோதனை செய்தனர்.

அப்போது ஒரு பயணி கிரைண்டர் மோட்டாரில் மறைத்து வைத்து, 18 லட்சம் ரூபாய் மதிப்பிலான 349 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து தங்கத்தைப் பறிமுதல் செய்த சுங்கத்துறை அலுவலர்கள், அந்தப் பயணியை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:வழக்கறிஞர் என்று கூறி விசாரணைக்கு வந்த தம்பதியிடம் பணம் கேட்டு மிரட்டிய பெண் - போலீஸ் விசாரணை

ABOUT THE AUTHOR

...view details