வெளிநாடுகளில் இருந்து திருச்சி வழியாக தங்கம் கடத்தும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சிங்கப்பூர், மலேசிய போன்ற நாடுகளில் இருந்தும், வளைகுடா நாடான சார்ஜாவில் இருந்தும் திருச்சிக்கு வரும் விமானங்களில் கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன.
திருச்சியில் ரூ.40.60 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்! - 3 பயணிகளிடம் 40 லட்சம் தங்கம் பறிமுதல்
திருச்சி : வெளிநாடுகளில் இருந்து திருச்சி வழியாக தங்கம் கடத்தி வந்த மூன்று பயணிகளிடமிருந்து ரூ.40.60 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
![திருச்சியில் ரூ.40.60 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4253796-379-4253796-1566878462452.jpg)
gold seized in trichy airport
இதில் வந்த விமானப் பயணிகளை வான் நுண்ணறிவுப்பிரிவு மற்றும் சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது நாகப்பட்டினத்தைச் சேர்ந்த அகிலன் , சிவகங்கையைச் சேர்ந்த விக்னேஷ், இளையான்குடியைச் சேர்ந்த முகமது மீரான் ஆகியோர் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவர்களிடம் இருந்து ரூ. 40 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள, 1,049 கிராம் எடையுள்ள தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து மூன்று பேரிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
TAGGED:
திருச்சி