மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் திருச்சி விமான நிலையத்திற்கு வந்தது. இதில் வந்த பயணிகளையும், அவர்களது உடமைகளையும் மத்திய வான் நுண்ணறிவுப் பிரிவு அலுவலர்கள் சோதனையிட்டனர்.
விமான நிலையத்தில் தங்கம் பறிமுதல் - வசமாக மாட்டிக்கொண்ட பயணி
திருச்சி: விமான நிலையத்தில் கடத்திக் கொண்டு வரப்பட்ட ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
File pic
அப்போது தஞ்சையைச் சேர்ந்த வினோத் என்பவர் உடலில் மறைத்து தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடமிருந்து 149 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ஐந்து லட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த கடத்தல் குறித்து வினோத்திடம் அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.