திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி வனச்சரகத்திற்கு உட்பட்ட மருங்காபுரி வனப்பகுதியில் குரங்கு, நரி, காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் அதிகளவில் உள்ளன. இந்த விலங்குகள் தங்களுக்கான உணவுக்காகவும், தண்ணீருக்காகவும் அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைவது வழக்கம்.
வாகனம் மோதி காட்டெருமை பலி
திருச்சி: மணப்பாறை அருகே நெடுஞ்சாலையைக் கடக்க முயன்ற காட்டு யானை மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில், காட்டெருமை உயிரிழந்துள்ளது.
இந்நிலையில், இன்று அதிகாலை காட்டெருமை ஒன்று மருங்காபுரி வனப்பகுதியில் இருந்து உணவிற்காக குடியிருப்பு பகுதிக்குள் வந்தபோது, திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முற்பட்டபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் காட்டெருமையின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து பேசிய அப்பகுதி மக்கள், ‘மருங்காபுரி வனப்பகுதியிலிருந்து வரும் வனவிலங்குகள், திருச்சி-மதுரை நெடுஞ்சாலையைக் கடக்கும்போது வாகனம் மோதி உயிரிழப்பது அதிகமாகியுள்ளதால், அதனைத் தடுப்பதற்காக வனவிலங்குகள் நடமாட்டம் குறித்த அறிவிப்பு பலகையை வனத்துறையினர் வைக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.