திருச்சியில் 150 ஆண்டுகளாக காந்தி மார்கெட் செயல்பட்டு வருகிறது. நூற்றுக்கணக்கான வியாபாரிகள் இங்கு தினமும் வியாபாரம் செய்து வருகின்றனர். அண்டை மாவட்டங்களுக்கு முக்கிய சந்தையாக இந்த காந்தி மார்கெட் விளங்குகிறது. இதனை திருச்சி மாவட்டம் மணிகண்டம் அருகே உள்ள கள்ளிக்குடிக்கு இடமாற்றம் செய்ய மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து கோடிக்கணக்கான ரூபாய் செலவில் கள்ளிக்குடியில் ஒருங்கிணைந்த மார்கெட் உருவாக்கப்பட்டது. அங்கு கட்டுமான பணிகள் முடிவடைந்து மார்கெட் செயல்படத் தயாராக உள்ள நிலையில், திருச்சி காந்தி மார்கெட் வியாபாரிகள் அங்கு செல்ல மறுப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் கட்டுமான பணி முடிந்து ஒரு ஆண்டுக்கு மேலாகியும் புதிய மார்கெட் மூடியே கிடக்கிறது. இந்நிலையில் திருச்சி காந்தி மார்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்கத் தலைவர் கமலக்கண்ணன் தலைமையில் இன்று மார்கெட் வளாகத்தில் உள்ள காந்தி சிலையிடம் மனு அளிக்கும் போராட்டத்தை நடத்தினர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கமலக்கண்ணன், 150 ஆண்டுகளாக செயல்படும் காந்தி மார்க்கெட்டை கள்ளிக்குடிக்கு இடமாற்றம் செய்து லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்க அதிகாரிகளும், ஆட்சியாளர்களும் வற்புறுத்தி வருகின்றனர். போக்குவரத்து நெரிசல் காரணமாக காந்தி மார்கெட் இடமாற்றம் செய்வதாக கூறுகின்றனர்.