கடந்தாண்டு ஜி கார்னரில் காந்தி மார்க்கெட் செயல்பட்டது. அதைப் போல மீண்டும் அங்கேயே மார்க்கெட்டை மாற்ற வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். மாநகராட்சி அலுவலர்கள், காவல் துறையினர், வியாபாரிகள் சங்கத்தினர் கலந்து ஆலோசித்து இதனைச் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் காந்தி மார்க்கெட் தற்காலிகமாக மேலபுலிவார்டு ரோட்டிற்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
நாளை முதல் காந்தி மார்க்கெட் இடமாற்றம்: மாநகராட்சி அறிவிப்பு
திருச்சி: காந்தி மார்க்கெட் நாளை இரவு (மே.16) முதல் மேலபுலிவார்டு ரோட்டிற்கு மாற்றப்படுவதாக மாநகராட்சி அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக திருச்சி மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
"திருச்சி மாவட்டம் மற்றும் மாநகராட்சி பகுதிகளில் கரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தினந்தோறும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து மொத்தம் மற்றும் சில்லரை வியாபாரம் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்படுகிறது.
மேற்படி வியாபாரம் மேலப்புலிவார்டு ரோடு காமராஜர் வளைவு முதல் வெல்லமண்டி சாலை சந்திப்பு வரை செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சாலையின் கீழ்புறம் இரவு மொத்த வணிகமும், மேல்புறம் சில்லரை வணிகம் காலை 6 மணி முதல் 10 வரை நாளை (16ம் தேதி) இரவு முதல் மறு உத்தரவு வரும் வரை நடைபெறும்" இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.