தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாடிக்கையாளருக்கு பல்லி விழுந்த ஐஸ்கிரீம் சப்ளை.. கடைக்கு சீல் வைத்த உணவு பாதுகாப்புத்துறை! - lizard fell ice cream

திருச்சியில் பல்லி விழுந்த ஐஸ்கிரீமை சப்ளை செய்த பிரபல ஐஸ்கிரீம் கடைக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

திருச்சியில் பல்லி விழுந்த ஐஸ்கிரீமை சப்ளை செய்த கடைக்கு  சீல் வைத்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள்
திருச்சியில் பல்லி விழுந்த ஐஸ்கிரீமை சப்ளை செய்த கடைக்கு சீல் வைத்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள்

By

Published : Aug 6, 2023, 4:58 PM IST

திருச்சியில் பல்லி விழுந்த ஐஸ்கிரீமை சப்ளை செய்த கடைக்கு சீல் வைத்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள்

திருச்சி மாநகர் பகுதியில் மெயின்கார்டு கேட், சிங்காரத் தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் மிக பெரிய வணிக வளாகம், துணிக் கடைகள், நகை கடைகள் திருச்சியின் முக்கிய அடையாளமாக மலைக்கோட்டை கோயில் உள்ளது. திருச்சி மாநகரிலேயே மிக பெரிய வியாபார ஸ்தலமாக இந்த இடம் இயங்கி வருகிறது. மேலும் இந்த பகுதியில் புகழ்பெற்ற பள்ளி, கல்லூரிகள் அதிக அளவில் உள்ளன.

பொது மக்கள் குடும்பம் குடும்பமாக அதிக அளவில் வந்து செல்ல கூடிய வணிக இடமாக இந்த இடம் இயங்கி வருகிறது. இந்நிலையில் திருச்சி மெயின்கார்டு கேட் தெப்பக்குளம் பகுதியில் பிரபல மைக்கேல்ஸ் அன்ட் சன்ஸ் ஐஸ்கிரீம் கடை பாரம்பரியமாக பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் இயங்கி வருகிறது. இந்த கடைக்கு வந்து ஜஸ்கீரிம் சாப்பிடாத நபர்கள் திருச்சியில் இருக்கவே முடியாது என கூறும் அளவிற்கு பழமையான மற்றும் பிரபலமான கடையாகும்.

இது ஒருபுறமிருக்க, இந்த ஐஸ்கிரீம் கடையில் கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி ஐஸ்கிரீம் சாப்பிட வந்த வாடிக்கையாளருக்கு பல்லி விழுந்த ஐஸ்கிரீமை கடை ஊழியர் வழங்கியதாக கூறி பொது மக்கள் உணவு பாதுகாப்புத்துறைக்கு புகார் அளித்தனர். புகாரின் பேரில் நேற்றைய தினம் (ஆகஸ்ட் 5) உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ் பாபு தலைமையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஜஸ்கீரிம் கடையில் அதிரடியாக சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் ஐஸ்கிரீம் கடை சுகாதாரமற்ற முறையில் இயங்கி வந்ததும், கிருமி தொற்று ஏற்படும் வகையில் இருந்ததும் கண்டறியப்பட்டது. இதனால் மைக்கேல் அண்ட் சன்ஸ் ஐஸ்கிரீம் கடையில் ஐஸ்கிரீம் விற்பனைக்கு தடை விதித்து அதிகாரிகள் கடைக்கு சீல் வைத்தனர்.

மேலும், இதே போன்று திருச்சி கண்டோன்மென்ட் பகுதி பாரதியார் சாலையில் செயல்பட்டு வந்த மைக்கேல் அண்ட் சன்ஸ் ஐஸ்கிரீம் கடையில் கடந்த மாதம் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் தரமற்ற வகையில் கெடும் நிலையில் ஐஸ்கிரீம் விற்பனை செய்யப்பட்டு வந்தது கண்டறியப்பட்டு, அந்தக் கடைக்கு சீல் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு கடந்த மாதம் பாரதியார் சாலையில் இயங்கி வந்த மைக்கில் ஐஸ்கிரீம் கடைக்கு சீல் வைக்கப்பட்ட நிலையில், தற்போது தெப்பக்குளம் மைக்கில் ஐஸ்கிரீம் கடையில் பல்லி விழுந்த ஐஸ்கிரீம் பரிமாறப்பட்டு கடைக்கு சீல் வைக்கப்பட்ட நிகழ்வு, திருச்சி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் மற்றும் ஐஸ்கிரீம் பிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க:ஐஜி அஸ்ரா கார்க்கின் அடுத்த குறி வடசென்னை - அள்ளுவிடும் ரவுடிகள்.. பாய்ச்சலுக்கு ரெடியான பஞ்சாப் ரியல் சிங்கம்!

ABOUT THE AUTHOR

...view details