திருச்சி கிராப்பட்டியில் செயல்பட்டு வரும் தனியார் கருணை இல்லத்தில் 'சுதந்திர தின விழா' கொண்டாடப்பட்டது. இதையொட்டி தேசியக்கொடி ஏற்றி, அங்கு தங்கியுள்ள முதியவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன . இந்நிகழ்வைத் தொடர்ந்து தனியார் தொண்டு நிறுவனம் மற்றும் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கண்புரை, கண்ணில் நீர் வடிதல், கிட்டப்பார்வை, தூரப்பார்வை போன்ற நோய்களுக்கு பரிசோதனைகளும் சிகிச்சைகளும் அளிக்கப்பட்டன.
நூற்றுக்கணக்கான எளியோர் பயனடைந்த இலவச கண் சிகிச்சை முகாம் - இலவச கண் சிகிச்சை முகாம்
திருச்சி: சுதந்திர தினத்தை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட ஏழைகளுக்கு இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது.

eye camp
தனியார் மருத்துவமனை சார்பில் நடைபெற்ற இலவச மருத்து முகாம்
இதில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்கள் கலந்துகொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டனர். இந்நிகழ்வில் தொண்டுநிறுவன செயல் இயக்குநர், திட்ட அமைப்பாளர், கல்லூரி பேராசிரியர், தனியார் கண் மருத்துவமனை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Last Updated : Aug 17, 2019, 7:44 AM IST