தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மணப்பாறையில் இலவச கண்பரிசோதனை முகாம் - அரவிந்த் கண் மருத்துவமனை

திருச்சி: அரவிந்த் கண்மருத்துவமனை சார்பில் நடந்த இலவச கண் பரிசோதனை முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

eye camp

By

Published : Jul 28, 2019, 11:19 PM IST

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில், அரவிந்த் கண்மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை, கண் சிகிச்சை முகாம் நடைப்பெற்றது.

இந்த முகாமில் கண் புரை, நீர் அழுத்தநோய், கிட்டப்பார்வை, தூரப்பார்வை, போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டு, நவீன அறுவை சிகிச்சை இலவசமாக செய்யப்பட்டது.

இம்முகாமில் வயதானவர்கள், குழந்தைகள் என சுமார் 250-க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டு பயன் அடைந்தனர்.

இலவச கண் பரிசோதனை முகாம்

ABOUT THE AUTHOR

...view details