திருச்சி: மணப்பாறை பகுதியில் கள்ளச்சந்தையில் வெளிமாநில ஆன்லைன் லாட்டரி விற்பனை நடைபெறுவதாக, காவலர்களுக்கு தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஜனனி பிரியா உத்தரவின் பேரில் காவல் துறையினர் நேற்று (டிசம்பர் 28) திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அனுமதியின்றி வெளிமாநில ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட கிருஷ்ணமூர்த்தி, முருகேசன், அய்யாவு, ராஜ்குமார் உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 3,000 ரூபாய் பணம், மூன்று செல்போன்கள், இரண்டு இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க:சென்னையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர் கைது