திருச்சி விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. இதில் வந்த பயணிகளையும், அவர்களது உடமைகளையும் வான் நுண்ணறிவு பிரிவு அலுவலர்கள் சோதனையிட்டனர்.
அப்போது வீட்டு உபயோக பொருளில் மறைத்து 4 கிலோ தங்கம் கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் இந்திய மதிப்பு ரூ.1.92 கோடியாகும்.