திருச்சி :ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்தவர்கள், அண்மையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதில், முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகிய நான்கு பேர் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களை திருச்சி சிறப்பு முகாமில் தங்க வைத்துள்ளனர்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான நளினி இன்று (நவ.14) அவரது கணவர் முருகனை சந்திக்க திருச்சி சிறப்பு முகாமுக்கு வருகை புரிந்தார். அவரது வருகைக்கு காவல் துறையினர் பலத்த பாதுகாப்பு போட்டுள்ளனர்.
திருச்சி சிறப்பு முகாமில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் பாதுகாப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர், 'திருச்சி சிறப்பு முகாமில் இருக்கும் முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய நால்வருக்கும் போதுமான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
இவர்கள் நான்கு பேரும் சிறப்பு முகாமினுள் உண்ணாவிரதம் இருப்பதாகச்சொல்லப்பட்ட தகவல் உண்மையில்லை. முகாமினுள் நடைபயிற்சி செல்ல அனுமதி கேட்டார்கள். அதனையும் கொடுத்துள்ளோம். முகாமினுள் இருக்கும் நால்வருடைய சொந்த நாட்டில் இருந்து, ஒப்புதல் கிடைக்கப்பெற்ற பின்னர், அவர்களை அவர்களுடைய நாட்டிற்கு அனுப்புவதற்கான நடைமுறைகள் செயல்படுத்தப்படும்' எனத் தெரிவித்தார்.
செய்தியாளர்களைச் சந்தித்த ஆட்சியர் பிரதீப் குமார் இதையும் படிங்க:எனது சந்திப்பால் முதலமைச்சருக்கு சிக்கல் வருமோ என்ற அச்சம் உள்ளது - நளினி