திருச்சி:கடந்த புதன்கிழமையன்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் கையெழுத்திட வந்தபோது அதிமுக தொண்டர்கள் அதிகளவில் கூட்டம் கூடினர். அப்போது, தமிழ்நாடு அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
இதனால், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், முன்னாள் அமைச்சர் நடராஜன், மாவட்ட செயலாளர் பரஞ்சோதி உள்ளிட்ட 100 பேர் மீது கரோனா பரவல் தடுப்புச்சட்டத்தின் கீழ், அதிகளவில் கூட்டம் கூடியது. அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பியது ஆகியவற்றிற்கு திருச்சி கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று (மார்ச் 18) சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி திருச்சி கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் மூன்றாவது நாளாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், முன்னாள் அமைச்சர்கள் நடராஜன், வளர்மதி உள்ளிட்ட மூவர், ஆய்வாளர் சேரன் முன்னிலையில் கையெழுத்திட்டார்.