திருச்சி: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திமுக தொண்டரை தாக்கியது உள்ளிட்ட 3 வழக்குகளில் கைதானார்.
ஜாமீனில் வெளி வந்துள்ள அவர், திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாள்கள் கையெழுத்திட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி 2ஆவது முறையாக இன்று (மார்ச். 16) கண்டோன்மென்ட் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அகிலா முரளிதரன் முன்னிலையில் ஜெயக்குமார் கையெழுத்திட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அதிமுக அமைச்சர்கள் மீதும் கழக முன்னோடிகள் மீதும் வழக்குகள் போட்டு மிரட்டி பார்க்கிறார்கள். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றாமல் உள்ளனர். அதிமுக அமைச்சர்கள் மீது வழக்குகளை போட்டு பணம், நகை ஏதும் கைப்பற்றாமல், அதை கைப்பற்றியதாக குறிப்பிடுவது பொய்" என்றார்.