தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கருணாநிதி நினைவு நாள்: நலத்திட்ட உதவி வழங்கவுள்ள திருச்சி திமுகவினர் - Karunanidhi Memorial Day

திருச்சி: மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி நினைவு தினத்தை முன்னிட்டு மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க திருச்சி மாவட்ட திமுகவினர் முடிவு செய்துள்ளனர்.

former dmk leader Karunanidhi Memorial Day: Trichy DMK to provide welfare assistance
former dmk leader Karunanidhi Memorial Day: Trichy DMK to provide welfare assistance

By

Published : Aug 4, 2020, 4:05 AM IST

திருச்சி தில்லை நகர் சாஸ்திரி சாலையில் உள்ள திமுக முதன்மை செயலக அலுவலகத்தில், முதன்மை செயலாளர் கே.என் நேரு தலைமையில் மத்திய மாவட்ட செயற்குழு கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது.

கூட்டத்தில் திருச்சி மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, எம்.எல்.ஏ சவுந்திரபாண்டியன், மாநகர செயலாளர் அன்பழகன், முன்னாள் எம்எல்ஏ அன்பில் பெரியசாமி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான (ஓபிசி) இட ஒதுக்கீட்டை நீதிமன்றம் மூலம் பெற்றுத் தந்த திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தல், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் இரண்டாவது நினைவு தினத்தை முன்னிட்டு வரும் ஏழாம் தேதி மாவட்டம் முழுவதும் நலத்திட்ட உதவிகள் வழங்குதல், கருணாநிதி செயல்படுத்திய மக்கள் நலத் திட்டங்களை எடுத்துக் கூறும் வகையில் பதாகைகளை ஏந்தி நிகழ்ச்சிகள் நடத்துதல்,

வாக்காளர் பட்டியல் புதுப்பித்தல் பணிக்கு பாகம் வாரியாக திமுக சார்பில் முகவர்கள் நியமனம் செய்யப்பட்டு தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி ஒப்புதல் பெறுதல், விடுபட்டுள்ள திமுக உள்கட்சி தேர்தலை நடத்தி முடித்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ABOUT THE AUTHOR

...view details