தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மத்திய சிறையில் வெளிநாட்டினர் பட்டினிப் போராட்டம்! - திருச்சி மத்திய சிறை கைதிகள் போராட்டம்

திருச்சி: மத்திய சிறையில் உள்ள அகதிகள் சிறப்பு முகாம் சிறையில் வெளிநாட்டினர் 70 பேர் தங்களை விடுவிக்கக்கோரி பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

Foreigners starve protest in trichy central jail

By

Published : Nov 7, 2019, 8:07 PM IST

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அகதிகளுக்கான சிறப்பு முகாம் சிறை உள்ளது. வெளிநாடுகளிலிருந்து கடவுச்சீட்டு(Passport) உள்ளிட்ட உரிய ஆவணங்களின்றி சட்டவிரோதமாக தமிழ்நாட்டில் தங்கியவர்கள் கைது செய்யப்பட்டு இந்த முகாமில் அடைக்கப்படுவார்கள். தற்போது இந்த முகாமில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை, வங்கதேசம், பல்கேரியா, சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 70 பேர் பட்டினிப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

சட்ட விரோதமாக கைது செய்து சிறப்பு முகாம் எனும் சிறையில் அடைத்திருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பிணை கிடைத்தும் தங்களை விடுவிக்க மறுக்கிறார்கள் என்றும், தங்களை பார்க்காமல் குடும்பத்தினர் தவித்து வருகிறார்கள் என்றும் அவர்கள் கூறுகின்றனர். மேலும் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இந்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சிறப்பு முகாமில் நீண்ட நாட்களாக இலங்கைத் தமிழர்கள் மட்டும் போராட்டம் நடத்திவந்த நிலையில், மற்ற வெளிநாட்டினரும் தற்போது போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இதையும் படிங்க: தொலைக்காட்சிப் பெட்டி விழுந்து குழந்தை உயிரிழப்பு: ஆந்திராவில் சோகம்

ABOUT THE AUTHOR

...view details