திருச்சி விமான நிலையத்திலிருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு செல்லவிருந்த ஏர் ஏசியா விமானத்தில் பயணம் செய்யவதற்காக வந்திருந்த பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அலுவலர்கள் சோதனையிட்டனர்.
மலேசியாவுக்கு கடத்த முயன்ற வெளிநாட்டு பணம் பறிமுதல் - பணம் பறிமுதல்
திருச்சி: மலேசியாவுக்கு சட்ட விரோதமாக கடத்த முயன்ற வெளிநாட்டு பணத்தை விமான நிலைய அலுவலர்கள் பறிமுதல் செய்துள்ளனர்.
வெளிநாட்டு பணம் பறிமுதல்
அப்போது ராமநாதபுரத்தைச் சேர்ந்த தஸ்பிகா ராணி என்ற பெண் சுமார் ரூ. 6.47 லட்சம் மதிப்புள்ள மலேசியா ரிங்கட், அமெரிக்க டாலர்களை மறைத்துக் கடத்த முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து தஸ்பிகா ராணியிடமிருந்து பணத்தை பறிமுதல் செய்த நுண்ணறிவு பிரிவு அலுவலர்கள், தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தினர். பெண் ஒருவர் லட்சக் கணக்கில் வெளிநாட்டு பணத்தைக் கடத்த முயன்ற சம்பவம் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.