தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

17 ஆயிரம் ரூபாயை திருடிய வெளிநாட்டு தம்பதி - திருச்சி திருட்டு

திருச்சி:மணப்பாறை அருகே உரிமையாளர் கண் முன்னே ரூ.17 ஆயிரத்தை வெளிநாட்டுத் தம்பதியினர் திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trichy cctv visual

By

Published : Sep 18, 2019, 5:24 PM IST

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பர்ஷத் அலி என்பவர் திருச்சி சாலையில் இரும்பு கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று பிற்பகலில் கட்டிங் வீல் வாங்க, அவரது கடைக்கு துருக்கி நாட்டைச் சேர்ந்த ஜோடி வந்தனர். வந்தவர்கள் பொருட்கள் வாங்கிய பின், சில்லறை தாள்கள் கொடுத்து அதற்கு மாற்றாக ரூ.2 ஆயிரம் முழு நோட்டை பெற்றனர்.

அதே நேரத்தில் அந்த பெண் பேச்சுக் கொடுத்து திசை திருப்ப அந்த வெளிநாட்டுப் பயணி நோட்டைத் தானே கிழித்துவிட்டு, ரூபாய் கிழிந்துள்ளது என்றும் தனக்கு CL வரிசை தாள் வேண்டும் என்று கேட்டுள்ளார். அப்போது CL நோட்டைத் தேடுவதைப்போல லாவகமாக 17 ஆயிரம் ரூபாயை அந்த வெளிநாட்டுப் பயணி திருடி தன் பையில் போட்டுக்கொண்டு வேகவேகமாக சென்றுவிட்டனர்.

அவர்கள் மீது சந்தேகம் ஏற்படவே கல்லாப்பெட்டியில் இருந்த பணத்தை எண்ணிப் பார்த்தபோது அதில் ரூ.17 ஆயிரம் குறைந்தது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து சிசிவிடி பதிவை பார்த்தபோது அந்த ஆண் சில 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கைக்குள் மறைத்து எடுத்து தனது பாக்கெட்டில் வைப்பது தெரியவந்தது.

சிசிடிவி காட்சிகள்

இதனையடுத்து பர்ஷத் அலி மணப்பாறை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், சிசிடிவி காட்சிகளை வைத்து வெளிநாட்டு ஜோடியை காவல் துறையினர் தேடி வருகின்றனர். தற்போது அந்த சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாமே: திருட வந்த இடத்தில் ஊஞ்சல் ஆடிய திருடன்!

ABOUT THE AUTHOR

...view details