தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களுக்காக சிறப்பு வீடு! - சாதி மறுப்பு திருமணம்

திருச்சி: சாதி மறுப்பு திருமணம் செய்தவர்கள் பாதுகாப்பாக தங்கி கொள்வதற்கு திருச்சி அண்ணா நகர் போலீஸ் காலனியில் 10 லட்சம் செலவில் வீடு ஒன்று கட்டப்பட்டுள்ளது.

சாதி மறுப்பு திருமணம்

By

Published : Feb 11, 2019, 6:28 PM IST

தமிழகத்தில் சாதி மறுப்பு திருமணத்தினால் பலரது உயிர் காவு வாங்கப்பட்டுள்ளது. இது போன்ற திருமணங்களால் உயிரிழந்தவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே வருகிறது. இந்நிலையில் சாதி மறுப்பு திருமணம் செய்தவர்கள் பாதுகாப்புடன் தங்கி கொள்வதற்காக திருச்சி மாநகரம் அண்ணா நகர் போலீஸ் காலனியில் ரூ.10 லட்சம் செலவில் வீடு கட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் பலர் பலனடைவர் என்பதற்காக இவ்விடுதி கட்டப்பட்டுள்ளது.

மேலும், சாதி மறுப்பு திருமணம் செய்தால் தம்பதிகள் பாதுகாப்பிற்காக காவல் நிலையத்தை தேடியே செல்கின்றனர். அங்கு பல மணி நேரம் தங்கி கொள்ள இயலாது என்பதற்காக இவ்வீடு திருச்சி மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இது போன்று கட்ட வேண்டும் என்று அனைவரும் வலியுறுத்தி வருகின்றனர்.

முன்னதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மாவட்ட நிர்வாகம் சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களுக்கு உதவ சிறப்பு பிரிவு அமைக்கக்கோரி உத்தரவிட்டிருந்தது. ஆனால் இன்று வரை இந்த சிறப்பு பிரிவு நான்கு மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details