தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிமுக எம்எல்ஏ பணம் ரூ.1 கோடி பறிமுதல்? - Trichy District News

திருச்சி அருகே அதிமுக கொடி கட்டிய காரிலிருந்து சுமார் ஒரு கோடி ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரு கோடி
ஒரு கோடி

By

Published : Mar 24, 2021, 9:57 AM IST

திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதிமுக கொடியுடன் வந்த இனோவா காரை பறக்கும் படையினர் நிறுத்தி சோதனையிட்டனர். அதில் சுமார் ஒரு கோடி ரூபாய் இருந்தது தெரியவந்தது.
அந்தப் பணத்திற்கு உரிய ஆவணம் இல்லை. மேலும், காரில் இருந்தவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால், பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்தனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விசாரணையில் இந்த காருக்கும், முசிறி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் செல்வராஜுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. செல்வராஜ் தற்போது அதிமுக சார்பில் முறை சட்டப்பேரவைத் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. அதிமுக கொடி கட்டிய காரில் ஒரு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details