வெள்ளை ஏகாதிபத்திய பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக போராடிய தமிழ்நாட்டின் விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு நாள் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 20ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
தென்காசி மாவட்டம் நெல்கட்டும்செவல் கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் ஒவ்வொரு ஆண்டும் அரசு அலுவலர்கள், அமைச்சர்கள், சமுதாய அமைப்பினர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்துவருகின்றனர்.
இந்த ஆண்டு கரோனா ஊரடங்கு காரணமாக தடை உத்தரவு உள்ளதால் சமுதாய அமைப்பினர், பொதுமக்கள் பெருமளவில் வருகையை தவிர்க்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.