திருச்சி:திருச்சி மாநகராட்சி அலுவலத்தை சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் தலைமையில் தள்ளுவண்டி, தரைக்கடை வியாபாரம் செய்து வருவபவர்கள் முற்றுகையிட்டனர்.
அப்போது 20 ஆண்டுகளுக்கும் மேலாக தள்ளுவண்டி, தரைக்கடை வியாபாரம் செய்து வரும் தங்களை ஆக்கிரமிப்பு என்ற பெயரில் அப்புறப்படுத்தக்கூடாது; 2014ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படி தரைக்கடை வியாபாரிகள் பாதுகாப்பு சட்டத்தை மீறக்கூடாது என முழக்கமிட்டனர்.