திருச்சி மாவட்டம், மணப்பாறையில் செயல்பட்டு வரும் கனரா வங்கி ஊழியர்கள் நால்வருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக, இன்று (மே.20) முதல் மூன்று நாட்களுக்கு வங்கிக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு உத்தரவிட்டுள்ளார்.
மணப்பாறையில் வங்கி ஊழியர்களுக்கு கரோனா; வங்கிக்கு ஐந்து நாள் விடுமுறை!
திருச்சி: மணப்பாறையில் செயல்பட்டு வரும் கனரா வங்கி ஊழியர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், ஐந்து நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
மணப்பாறையில் வங்கி ஊழியர்களுக்கு கரோனா; வங்கிக்கு ஐந்து நாள் விடுமுறை!
வரும் 22 ஆம் தேதி நான்காவது சனிக்கிழமை, பின்னர் ஞாயிற்றுக்கிழமை என, மொத்தம் ஐந்து நாட்கள் வங்கிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வங்கி ஊழியர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள சம்பவம், அப்பகுதி வங்கி வாடிக்கையாளர்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : இதுவரை எத்தனை முறை பரோலில் வந்துள்ளார் பேரறிவாளன்?