திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பாலக்கருதம் பட்டியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவர் நேற்று மதியம் தனது தோட்டத்து பகுதியில் பசுமாடு ஒன்றை மேய்ச்சலுக்காக விட்டிருந்தார். அப்போது, மாடு எதிர்பாராதவிதமாக அருகே இருந்த கிணற்றுக்குள் தவறி விழுந்தது. பசுமாடு கிணற்றுக்குள் இருப்பதைக் கண்ட செல்வராஜ், தீயணைப்புப் படையினருக்கு தகவல் அளித்தார்.
கிணற்றுக்குள் விழுந்த பசுமாடு! 2 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு - Firefighters
திருச்சி: மணப்பாறை அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த பசுமாட்டை பொதுமக்களின் உதவியுடன் தீயணைப்பு படையினர் மீட்டனர்.
fire-service
கிணற்றுக்குள் விழுந்த பசுமாடு! 2 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மணப்பாறை தீயணைப்புப் படையினர் அருகிலிருந்த பொதுமக்களின் உதவியுடன் சுமார் இரண்டு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு கிணற்றுக்குள் இருந்த பசுமாட்டை பத்திரமாக மீட்டனர்.