திருச்சி மாவட்டம் திருவெறும்பூர், துவாக்குடி, மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் துரைசாமி (70). இவருக்கு சொந்தமாக அந்தப் பகுதியில் நிலம் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூரில் உள்ள தனது மகள் வீட்டிற்கு துரைசாமி சென்றுவிட்டார்.
பின்னர் மீண்டும் அங்கிருந்து திரும்பி அவரது நிலத்திற்கு வந்து பார்த்தபோது அதே பகுதியைச் சேர்ந்த வின்சென்ட், ஜென்மராக்கினி ஆகியோர் இவருக்கு சொந்தமான நிலத்தில் கால்நடைகளை கட்டி இடத்தை ஆக்கிரமித்திருந்தனர். இதுகுறித்து துரைசாமி கேட்டதற்கு அவரை மிரட்டியுள்ளனர்.
முதியவர் தீ குளிக்க முயற்சி மேலும் இந்த நிலம் தங்களுடையது என்றும், விலை கொடுத்து வாங்கியிருப்பதாகவும் கூறியுள்ளனர். இதுதொடர்பாக துவாக்குடி காவல் நிலையத்தில் துரைசாமி புகார் அளித்துள்ளார். ஜென்மராக்கினி அம்மா உணவகத்தில் பணியாற்றிவருகிறார். இதனால் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கத் தயங்குவதாக கூறப்படுகிறது.
இதனால் துரைசாமி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்தார். அப்போது திடீரென தன் கையில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை தடுத்து நிறுத்தினர். தகவலறிந்து வந்த காவல் துறையினர் துரைசாமியை விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
இதையும் படிங்க: கணவன் திருநங்கையாக மாறியதால் மனைவி தீக்குளிக்க முயற்சி!