தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆவின் ஆலையில் தீ விபத்து - ஒருவர் படுகாயம் - தீ விபத்து

திருச்சி கொட்டப்பட்டு ஆவின் பால் பண்ணையில் நள்ளிரவில் பாய்லர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

ஆவின் ஆலையில் தீ விபத்து
ஆவின் ஆலையில் தீ விபத்து

By

Published : Feb 24, 2022, 3:41 PM IST

திருச்சிமாவட்டம் கொட்டப்பட்டில் தமிழ்நாடு அரசு நிறுவனமான ஆவின் பால் பண்ணை செயல்பட்டு வருகிறது.
திருச்சி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியம் வாயிலாக திருச்சி, பெரம்பலூா், அரியலூா் மாவட்ட விவசாயிகளிடமிருந்து நாளொன்றுக்கு 4 லட்சத்து 70 ஆயிரம் லிட்டர் பால், கொள்முதல் செய்யப்படுகிறது.

தினசரி விற்பனையாக 1 லட்சத்து 20 ஆயிரம் லிட்டர் பால் பாக்கெட்டுகள் திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு (பிப். 23) 2 மணியளவில் அங்கிருந்த பாய்லர் ஒன்றில் இணைக்கப்பட்டிருந்த ஆயில் குழாய் அதீத வெப்பம் காரணமாக வெடித்து சிதறியது.

இதனால் அங்கு தீப்பிடித்து எரிந்தது. அப்போது அங்கு பணியில் இருந்த புத்தூஸ் (34) என்ற ஒப்பந்த ஊழியர் உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.

பின்னர், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர், விரைந்து செயல்பட்டு உடனடியாக தீயை அணைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த கேகே நகர் காவல் துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:தீபாவளி ஏலச்சீட்டு நடத்தி ரூ.37.50 லட்சம் மோசடி : பெண் கைது

ABOUT THE AUTHOR

...view details