தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவலர் பயிற்சி பள்ளியில் பெண் காவலர் தற்கொலை முயற்சி! - suicide attempts

திருச்சி: காவலர் பயிற்சி பள்ளியில் பெண் காவலர் ஒருவர் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

female-police-officer-attempts-suicide-at-police-training-school
female-police-officer-attempts-suicide-at-police-training-school

By

Published : Oct 10, 2020, 2:02 AM IST

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் சம்யுக்தா (24). காவலரான இவர் திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவலர் குடியிருப்பு பகுதியிலுள்ள காவல் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்றுவந்துள்ளார்.

இந்நிலையில் அவர் பிறந்தநாளான நேற்று (அக்.9) அவர் திடீரென விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதனைக் கண்ட சக காவலர்கள் அவரை மீட்டு உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து நவல்பட்டு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் பயிற்சி கல்லூரியின் முதல்வர், துணைமுதல்வர் ஆகியோர் அடிக்கடி பாலியல் ரீதியாக அவதூறான முறையில் பேசியதாக தெரியவந்தது. இதனால் மனமுடைந்த பெண் காவலர் நேற்று விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக காவலர் பயிற்சி பள்ளி முதல்வர், துணை முதல்வர் மற்றும் பணியாளர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் காவலர் பயிற்சி பள்ளியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:ஆட்டோவில் கஞ்சா விற்பனை: பெண்கள் உள்பட 10 பேர் கைது!

ABOUT THE AUTHOR

...view details