தமிழ்நாடு முற்போக்கு பெண் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் சங்கத்தலைவர் பானுமதி தலைமையில், மேட்டுப்பாளையத்தில் தீண்டாமை சுவரால் உயிரிழந்த 17 பேருக்கு உடனடியாக நீதி வழங்க வேண்டும் எனவும்; தீண்டாமை சுவர் எழுப்பப்பட்டதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, சிறையில் அடைக்க வேண்டும் எனவும்; பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டுப் போராடியவர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் தீண்டாமை சுவர் எழுப்ப அனுமதித்த மற்றும் புகார் கொடுத்தப் பின்னரும் நடவடிக்கை எடுக்காத நகராட்சி நிர்வாக அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுத்து அவர்களை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் எனவும்; ஒடுக்கப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதியில் அனைவருக்கும் இலவசமாக வீடு கட்டி கொடுக்க வேண்டும் எனவும்; தீண்டாமையைக் கடைப்பிடித்தவரின் சொத்துக்களை பறிமுதல் செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.