தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட பெண் மருத்துவர் - trichy news

திருச்சியில் பெண் மருத்துவர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டனர்.

Women doctor suicide  தூக்கிட்டு தற்கொலை  தற்கொலை  suicide  hanging  Female doctor committed suicide by hanging  திருச்சி செய்திகள்  trichy news  trichy latest news
தற்கொலை

By

Published : Sep 21, 2021, 8:36 AM IST

திருச்சி: சுப்ரமணியபுரம் ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்தவர் சஞ்ஜினி (30). இவர் ஒரு மருத்துவர். இவர் மகளிர் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மருத்துவராக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணிபுரிந்துவந்தார்.

இவரது கணவர் கோகுலும் மருத்துவர். தம்பதிக்கு ஒரு வயதில் குழந்தை உள்ளது. இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக சஞ்ஜினி கடந்த மூன்று மாதங்களாகக் கணவரைப் பிரிந்து வாழ்ந்துவந்தார்.

மன உளைச்சலால் தற்கொலை

மேலும் இவர்கள் இருவரும் விவாகரத்து பெற முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர். சஞ்ஜினியின் குழந்தைக்கு காதணி விழா நேற்று முன்தினம் (செப். 19)நடைபெற்றுள்ளது. இதற்கு கணவர் வரவில்லை.

இது தொடர்பாக விழாவுக்கு வந்த உறவினர்கள் சஞ்ஜினியிடம் விசாரித்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் செப்டம்பர் 19 அன்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

தற்கொலை தீர்வாகாது

இது குறித்து தகவலறிந்த கே.கே. நகர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று, சஞ்ஜினியின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், இது குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: உடல் வலி நிவாரண மாத்திரையில் போதை - விற்பனை செய்த இருவர் கைது

ABOUT THE AUTHOR

...view details