கத்தார் நாட்டின் தோகா நகரில் நடைபெற்ற ஆசிய தடகள போட்டியில், திருச்சி முடிகண்டம் பகுதியை சேர்ந்த கோமதி கலந்துக் கொண்டார். இதில், மகளிர் 800 மீட்டர் பிரிவில் தங்கம் வென்று நாட்டிற்கு பெருமையை தேடித் தந்தார்.
ஆசிய போட்டியில் தங்கம் வென்ற கோமதிக்கு திருச்சியில் பாராட்டு விழா - Gomathi Marimuthu
திருச்சி: ஆசிய போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தடகள வீராங்கனை கோமதிக்கு திருச்சியில் கல்வியாளர்கள் பாராட்டு விழா நடத்தினர்.
ஆசிய போட்டியில் தங்கம் வென்ற கோமதிக்கு திருச்சியில் பாராட்டு விழா
தனது சொந்த ஊரான திருச்சிக்கு திரும்பிய கோமதிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் கார் மூலம் முடிகண்டம் கிராமத்திற்குச் சென்றார். அங்கும் முடிகண்டம் கிராம மக்கள் மட்டுமின்றி சுற்றுப்புற பகுதியில் உள்ள அனைத்து கிராம மக்களும் கூடி நின்று அவருக்கு வரவேற்பு அளித்தனர்.
இந்நிலையில் இன்று காலை திருச்சி மணிகண்டம் பகுதியில் உள்ள இந்திரா கணேசன் கல்வி நிறுவனங்கள் சார்பில் கோமதிக்கு பாராட்டு விழா நடைபெற்றது.