திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி அருகே உள்ள குக்கிராமத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவர், தனது குழந்தைகள் மற்றும் மனைவியுடன் தனியாக வசித்து வருகிறார்.
திருச்சி அருகே மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தை கைது!
திருச்சி: குடிபோதையில் 14 வயது மகளை பாலியல் தொந்தரவு செய்த தந்தையை காவல்துறையினர் போஸ்கோ சட்டத்தில் கைது செய்தனர்.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி வழக்கம்போல் வேலை முடிந்து மது அருந்திய நிலையில் வீட்டிற்கு வந்த அவர், வீட்டில் தனியாக இருந்த 14 வயதே ஆன தனது மகளை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளார். இதனையடுத்து, அச்சிறுமி தனது தாயுடன் புறப்பட்டு அவரது தாத்தா வீட்டிற்கு சென்று விட்டார்.
பின்னர், தனது தாய் மற்றும் தாத்தாவுடன் மணப்பாறை மகளிர் காவல் நிலையத்திற்குச் சென்ற அச்சிறுமி, தனது தந்தை மீது புகார் அளித்துள்ளார். இதையடுத்து காவல் துறையினர் அந்த நபரை போஸ்கோ சட்டத்தில் கைது செய்து அவரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மகளுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய தந்தையே இதுபோன்ற செயலில் ஈடுபட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.