விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், நகை ஜப்தி நடவடிக்கையை நிறுத்திட வேண்டும், வெங்காயத்தை அரசே நியாயமான விலையில் கொள்முதல் செய்து குறைவான விலையில் விற்க வேண்டும், மேட்டூர் - அய்யாறு - உப்பாறு இணைப்புத் திட்டத்தையும் காவிரி - குண்டாறு -வைகை இணைப்புத் திட்டத்தையும் நிறைவேற்ற வேண்டும், கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டத்திற்கு நிதி ஒதுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் மேற்கொண்டுள்ளது.
சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி ஜங்சன் அருகே இப்போராட்டம் நடைபெற்றது. விவசாயிகள் மேல்சட்டை அணியாமல் நாமம் போட்டு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜனவரி 8ஆம் தேதிவரை போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
மூன்றாவது நாள் விவசாயிகள் கோவணம் அணிந்து, பட்டை நாமம் போட்டு, ரத்தக் கண்ணீர் வடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 4ஆவது நாள் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து 5வது நாளான நேற்று விவசாயிகள் தூக்கு கயிறை கழுத்தில் மாட்டிக்கொண்டு தூக்கு போடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 6வது நாளான நேற்று விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதை எடுத்துக் கூறும் வகையில் பிணம் போல் வேடமிட்டு போராட்டம் நடத்தினர்.
வாயில் வாழைப்பழத்துடன் விவசாயிகள். கடைசி நாளான இன்று விவசாயிகள், முதலமைச்சர் வேடமிட்ட ஒருவர் வாழைப்பழத்தை விவசாயிகளுக்கு ஊட்டுவது போல நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் விவசாயிகளை சங்கிலியால் கட்டிப்போட்டு முதலமைச்சர் சாட்டையால் அடிப்பது போன்றும் சித்திரித்து போராட்டம் நடத்தினர்.
அய்யாக்கண்ணு செய்தியாளர் சந்திப்பு இதையும் படிங்க: ஊருக்கு உழைத்தவரை ஓரங்கட்டிய கிராம மக்கள்!