தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் சுமார் 100 விவசாயிகள் இன்று திருச்சி ரயில் நிலையத்திலிருந்து காலை 6.40 மணிக்கு சென்னைக்கு செல்லும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் புறப்பட்டு சென்றனர். செல்வதற்கு முன் ரயில் நிலையத்தில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். அப்போது அய்யாக்கண்ணு செய்தியாளர்களிடம் கூறுகையில்,
- 2016ஆம் ஆண்டு வறட்சியால் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளுக்கு இது வரை நஷ்ட ஈடு வழங்கவில்லை.
- உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் விவசாய கடன் தள்ளுபடி செய்ய உத்தரவிட்டும், தமிழக அரசு இதுவரை தள்ளுபடி செய்யாமல் உள்ளது.
- மேற்குத்தொடர்ச்சி மலையில் பொழியும் மழைநீர் வீணாக கர்நாடகா செல்கிறது இவற்றை தமிழக விவசாயத்திற்கு திருப்பிவிட வேண்டும்.
- மரபணு மாற்றப்பட்ட விதைகளால் பெண்கள் கருத்தரிப்பது குறைந்து வருகிறது. விவசாயிகளுக்கு லாபகரமான விலை கொடுக்காமல் மரபணு மாற்றப்பட்ட உணவு வகைகளை இறக்குமதி செய்து உடல் ஆரோக்கியத்தை கெடுத்து வருகின்றனர் இவற்றை தடுத்து நிறுத்த வேண்டும்.
- நதிகளை இணைக்கவேண்டும்.