திருச்சி: மத்திய அரசு நாடாளுமன்றத்தில் புதிதாக மூன்று வேளாண் சட்டங்களை சமீபத்தில் நிறைவேற்றியது. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி நிறைவேற்றப்பட்ட இந்த சட்டங்களுக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், பல மாநில விவசாயிகள் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருச்சியில் விவசாயிகள் தரையில் படுத்து போராட்டம் - விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம்
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சியில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
![திருச்சியில் விவசாயிகள் தரையில் படுத்து போராட்டம் Farmers hunger strike in Trichy to support famers potest](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-9978942-0-9978942-1608718074399.jpg)
இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாட்டில், திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள், விவசாய சங்கங்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இந்நிலையில் திருச்சியில் இன்று விவசாய சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் சிந்தாமணி அண்ணா சிலை அருகே நடைபெற்ற இந்தப் போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க மாநிலத் தலைவர் காவிரி தனபாலன் தலைமை வகித்தார்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு, தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் செல்லமுத்து ஆகியோர் கலந்துகொண்டனர். போராட்டத்தின் ஒரு பகுதியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தரையில் படுத்து போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டம் காலை முதல் மாலை வரை நடைபெற்றது.