தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மேட்டூர் அணையில் 100அடி நீரை இருப்பு வைக்கவேண்டும்: பி.ஆர். பாண்டியன்! - திருச்சி மாவட்ட செய்திகள்

திருச்சி: குறுவை சாகுபடிக்கு பயன்படும் வகையில் மேட்டூர் அணையில் 100 அடி நீரை இருப்பு வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் தெரிவித்துள்ளார்.

செய்தியார்களை சந்தித்த பி.ஆர். பாண்டியன்

By

Published : Nov 19, 2019, 1:51 AM IST

தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர் பாண்டியன் திருச்சி சுப்ரமணியபுரத்தில் உள்ள பொதுப்பணித் துறை அலுவலகத்தில் தலைமை பொறியாளரை சந்தித்து இன்று மனு ஒன்றை அளித்தார். இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூரியதாவது,

தமிழ்நாட்டில் நீண்டநாள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில், தமிழ்நாடு நீர்வளம் மற்றும் ஆறுகள் சீரமைப்பு மேம்பாட்டுக் கழகம் அமைத்துள்ளதற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். காவிரி டெல்டாவில் உபரிநீர் கடலில் கலப்பதை தடுத்து பாசனத்திற்கும் உபரி நீர்திட்டங்களுக்கு பயன்படுத்தும் நோக்கோடும் நீர் ஆதாரங்களை மேம்படுத்தும் வகையில் ராசி மணல் அணையை நிறைவேற்றிட வேண்டும்.

தமிழ்நாடு அரசு, ராசி மணல் அணை குறித்த திட்ட அறிக்கையை மத்திய அரசிற்கு முன்மொழிந்து கட்டுமானப் பணியை தொடங்கிட வேண்டும். காவிரி பாசனப் பகுதி, தமிழ்நாடு முழுவதிலும் உள்ள பொதுப்பணித் துறையில் உள்ள செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர், உதவிப் பொறியாளர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும்.

செய்தியார்களை சந்திக்கும் பி.ஆர். பாண்டியன்

சென்னை எழும்பூரில் உள்ள காவிரி தொழில்நுட்பக் குழு அலுவலகம் அடர்ந்த வனப்பகுதில் பாதுகாப்பற்ற முறையில் செயல்பட்டு வருகிறது. அதனை பாதுகாப்பான புதிய கட்டிடத்திற்கு மாற்றம் செய்திட வேண்டும். மேட்டூர் அணையில் தற்போது 120 அடி முழு கொள்ளளவு தண்ணீர் இருப்பு உள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

நீர் பயன்பாட்டை ஒழுங்குப்படுத்தி, சிக்கனப்படுத்தி ஜனவரி 28ஆம் தேதி மூடப்படும் போது 100 அடிக்கு குறைவில்லாமல் இருப்பு வைக்கும் நோக்கோடு உரிய கண்காணிப்பு செய்திட வேண்டும். இதனை சேமிப்பது மூலம் வரும் 2020ஆம் ஆண்டு குறுவைசாகுபடிக்கு ஜூன் 12ல் தண்ணீர் திறப்பதற்கான நடவடிக்கையை தற்போதே மேற்கொள்ளலாம்.

தமிழ்நாடு முழுவதும் குடிமராமத்து, துர்வாரும் பணிகள் நடப்பாண்டில் 40 சதவீதம் மட்டுமே நிறைவுப் பெற்றுள்ளது. மீதம் உள்ள 60 சதவீதம் பணிகளை வரும் பிப்ரவரி மாதமே தொடங்கிட வேண்டும். தூர்வாருவதற்கு நிரந்தர அரசாணை வழங்கிட வேண்டுகிறோம். காவிரி உள்ளிட்ட ஆறுகளிலும் சட்டவிரோத நடக்கும் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்திட வேண்டும்.

மேலும் வெளி மாநிலங்களுக்கும், வெளி நாடுகளுக்கும் கடத்தப்படும் மணலுக்கு நிரந்தர தடை விதித்திட வேண்டும். தமிழ்நாட்டிற்குத் தேவையான மணலை, வாய்ப்புள்ள இடங்களில் அனுமதிக்கப்பட்ட அளவில் எடுத்து உரியவிலை நிர்ணயம் செய்து அரசே விற்பனைசெய்வதை கண்டிப்புடன் நடைமுறைப்படுத்த வேண்டும்.

இக்கோரிக்கைகள் அடங்கிய மனு பொதுப்பணித் துறை தலைமை பொறியாளரிடம் அளித்து, தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரை செய்யுமாறு வலியுறுத்தப்பட்டது. இதை தமிழ்நாடு அரசு பரிசீலனை செய்ய வேண்டும் இல்லையென்றால் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க : உச்ச நீதிமன்ற தீர்ப்பு மேகேதாட்டு அணைக்கான எச்சரிக்கை - பி.ஆர். பாண்டியன்

ABOUT THE AUTHOR

...view details