தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாடுகளை விவசாயிகள் கட்டுப்படுத்த மூக்கணாங்கயிறு அவசியம்: உயர் நீதிமன்றத்தில் முறையிட முடிவு - undefined

மாடுகளை கட்டுப்படுத்த மூக்கணாங்கயிறு அவசியம் என்பதை விவசாயிகள் சார்பாக உயர் நீதிமன்றத்தில் எடுத்துக் கூறுவோம் என்று ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச் சங்கம் தெரிவித்துள்ளது.

social issue
social issue

By

Published : Sep 2, 2021, 6:14 AM IST

திருச்சி: ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச் சங்க மாநில தலைவர் ஒண்டிராஜ், செயலாளர் சூரியூர் ராஜா ஆகியோர் திருச்சி பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில்,

மாடுகளை கட்டுப்படுத்துவதற்காக அதன் முக்கில் துளையிட்டு மூக்கணாங்கயிறு போடப்படுகிறது. இவ்வாறு துளைபோட மிருகவதை தடை சட்டப் பிரிவும் அனுமதிக்கிறது. எனவே, இந்த சட்டப்பிரிவை ரத்து செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் செந்தில்குமார் என்பவர் பொது நல மனுவாக தாக்கல் செய்துள்ளார். கடந்த வாரம் தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், உலக அளவில் மாடுகளை கட்டுப்படுத்த இந்த நடைமுறைதான் பின்பற்றப்படுகிறது. தற்போது இந்த வழக்கின் மூலம் புதிய விதிகளை வகுத்து உலகத்தை பின்பற்ற செய்வோம் என்று தெரிவித்துள்ளத்துடன், இந்த வழக்கிற்கு மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளனர்.

உண்மையில் மாடு வளர்ப்பில் ஈடுபடும் விவசாயிகளுக்கு இந்த வழக்கு மிகவும் அதிர்ச்சியளிக்கக்கூடிய ஒன்றாக அமைந்துள்ளது. நமது நாட்டில் உழவுதான் முக்கியத் தொழில். இன்னும் பல கிராமங்களில் ஏர் உழுதல் தொடங்கி கதிர் அறுவடை செய்து, நெல் மூட்டைகளை வீட்டுக்கு கொண்டு சேர்ப்பது வரை அனைத்து நிலைகளிலும் விவசாயிகளுக்கு துணையாக இருப்பது மாடுகள்தான்.

காளை மாடுகள் மட்டுமின்றி வீடுகளில் வளர்க்கக்கூடிய பசு மாடுகளையும்கூட மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லவும், பட்டிகளில் கட்டி வைப்பதற்கும் மூக்கணாங்கயிறு மிகவும் அவசியம். அது இல்லாவிட்டால் யாராலும் மாடுகளிடம் நெருங்கக்கூட முடியாது. அவற்றுக்கு உணவளிக்கவும் முடியாது. அதனால்தான் ஒவ்வொரு மாட்டையும் மூக்கணாங்கயிறு கட்டி பராமரித்து வருகின்றனர்.இது நேற்று இன்று வந்த பழக்கம் அல்ல.

காலங்காலமாக விவசாயிகள் இப்படித்தான் பின்பற்றி வருகின்றனர். மாடுகளுக்கும், மனிதர்களுக்குமான இடையேயான உறவுப்பாலமாக மூக்கணாங்கயிறு இருக்கிறது. இது நன்கு தெரிந்தும்கூட இப்படியொரு வழக்கினை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருப்பது எங்களுக்கு அதிர்ச்சியளிக்கிறது.

மாடுகளுக்கு மூக்கணாங்கயிறு அணிவிக்க வேண்டியதன் அவசியம் குறித்து விவசாயிகளின் சார்பில் உயர்நீதிமன்றத்துக்கு தெரியப்படுத்தும் வகையிலும், இந்த விசயத்தில் நல்ல முடிவெடுக்கக் கோரியும் நாங்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளோம். அந்த மனு விசாரணைக்கு வரும்போது எங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்க உள்ளோம். அந்தக் காலத்திலேயே வன விலங்குகள், வீட்டு விலங்குகள் என்ன பிரித்து வைத்துள்ளார்கள்.


வனவிலங்குகள் கட்டுப்படாது. வீட்டு விலங்குகளை தான் கட்டுப்படுத்த முடியும் என்பதால் தான் அவற்றை கயிறு, சங்கிலி போன்றவற்றில் கட்டும் நடைமுறை இருந்து வருகிறது. தற்போது மாடுகளுக்கு மூக்கணாங்கயிறு போடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பின்னர் இந்த பிரச்னை ஜல்லிக்கட்டில் வந்து நிற்கும். விவசாயிகள் என்ற முறையில் தான் தற்போது நாங்கள் போராடுகிறோம். இந்த வழக்கு தொடுப்பதற்கான அடிப்படை ஆதாரமே இல்லை. வழக்கு தொடுத்தவர் பின்புலத்தை ஆராய வேண்டும். விளம்பரத்திற்காக வழக்கு தொடுத்தாரா அல்லது வேறு ஏதும் காரணம் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

தற்போது மூக்கணாங்கயிறு இல்லாமல் ஜெர்சி பசுக்களை மட்டுமே கயிற்றில் கட்டும் முறை உள்ளது. அத்தகைய ஜெர்சி மாடுகளை இங்கே கொண்டுவருவதற்கு தான் இந்த திட்டம் நடக்கிறது. நாட்டு மாடுகளை அழிக்க வேறு ஒரு வழியில் முயற்சிகள் நடக்கிறது. கன்றுக்குட்டியாக இருக்கும் போதே அதற்கு மூக்கணாங்கயிறு போடுவது கிடையாது. ஒரு குறிப்பிட்ட பருவத்தை அடைந்தவுடன் தான் மாடுகளுக்கு மூக்கணாங்கயிறு போடப்படுகிறது. ஆகையால் இப்பிரச்சினையில் விவசாயிகளுக்கு ஆதரவாக மத்திய மாநில அரசுகள் செயல்பட வேண்டும் என்றனர்.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details