தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டெல்லியில் மீண்டும் நிர்வாணப் போராட்டம்: அய்யாக்கண்ணு அறிவிப்பு! - விவசாயி அய்யாக்கண்ணு

திருச்சி: விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் டெல்லியில் மீண்டும் நிர்வாணப் போராட்டம் நடத்தப்படும் என்று அய்யாக்கண்ணு அறிவித்துள்ளார்.

farmer ayyakannu  அய்யாக்கண்ணு  டெல்லி நிர்வாணப் போராட்டம்  தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம்  திருச்சி செய்திகள்  trichy news  farmer associations ayyakannu  nude protest
விரைவில் டெல்லியில் நிர்வாண போராட்டம்: அய்யாகண்ணு அறிவிப்பு

By

Published : Jun 17, 2020, 5:22 PM IST

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அச்சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்சி - கரூர் பைபாஸ் சாலைப் பகுதியிலுள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்திற்குப் பின்னர் அய்யாக்கண்ணு செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது, "மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக அமித்ஷாவை சந்தித்தோம். விவசாயிகளுக்கு ஆறாயிரம் ரூபாய் நிதிஉதவி அளிக்கப்படும், நதிகள் இணைக்கப்படும், விளைபொருட்களுக்கு லாபகரமான விலை கொடுக்கப்படும், ஐந்து லட்சம் ரூபாய் கடன் வட்டி இல்லாமல் விவசாயிகளுக்கு கொடுக்கப்படும் என்று அவர் எங்களிடம் உறுதியளித்தார்.

ஆனால், ஓராண்டாகியும் இன்னும் அவை நிறைவேற்றப்படவில்லை. மீண்டும் தேர்தல் வராது, நாங்களும் டெல்லிக்கு வரமாட்டோம் என அவர் நினைக்கிறாரோ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், விரைவில் டெல்லிக்குச் சென்று நிர்வாணப் போராட்டம் நடத்துவோம்.

கரோனா பாதிப்புக்கு 20 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்திருப்பதாக மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார். ஆனால், விவசாயிகளுக்கு எவ்வித அறிவிப்பும் வெளியிடவில்லை.

டெல்லியில் விரைவில் நிர்வாணப் போராட்டம் நடத்துவோம்- அய்யாக்கண்ணு

குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், தற்போது உள்ள தண்ணீர் 40 நாள்களுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும். கடைமடை பகுதிகளுக்கு இரண்டு நாள்களில் சென்றுவிடும் என்று அமைச்சர் தெரிவித்தார். ஆனால், 10 நாள்கள் ஆனாலும் கடைமடை பகுதிக்கு தண்ணீர் சென்றடையாது.

கரோனா காலத்தில் அதிகளவில் விவசாயிகள்தான் பாதித்துள்ளனர். தற்போது விவசாயிகள் கையில் பணம் இல்லை. கூட்டுறவு சங்கத்திற்குச் சென்றாலும் பணம் வழங்க மறுக்கிறார்கள். நாங்கள் எப்படி சாகுபடி செய்வது” என்றார்.

இதையும் படிங்க:'கரோனா தொற்று நடவடிக்கையில் வெளிப்படைத்தன்மை அவசியம்' - ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details