தமிழ்நாடு முதலமைச்சரை தொடர்ந்து இழிவாக பேசி வரும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்தும், மன்னிப்பு கேட்க வலியுறுத்தியும் திருச்சி மாவட்டம், மணப்பாறையில் அதிமுக திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் ப. குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், தமிழ்நாடு முதலமைச்சரை அவதூறாக பேசிய உதயநிதி மன்னிப்பு கேட்க வேண்டும், அவதூறாக பேசுவதை நிறுத்தி கொள்ள வேண்டும் என்று அதிமுகவினர் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
இதனையடுத்து ஆர்ப்பாட்டதில் அதிமுக புறநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்பியுமான குமார் பேசுகையில், "திமுகவுக்கும் ஸ்டாலினுக்கு தை பிறந்தால் வழி பிறக்காது, வலிதான் பிறக்கும். முதலமைச்சரை அவதூறாக பேசிய கருணாநிதியின் குடும்பம் வந்த வரலாற்றை எண்ணிப் பார்ப்பது நல்லது.
ஏன் உதயநிதி, ஸ்டாலின், கருணாநிதி இரட்டை அர்த்தத்தில் பேசுகிறார்கள் என்றால் தன்னுடைய பிறப்பு எப்படி இருந்ததோ. அதே போலத்தான் அவர்களுடைய பேச்சின் வெளிப்பாடும் இருக்கும். அதேபோல்தான் உதயநிதியும்” என்று அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளை கூறினார்.
மேலும், “இப்படி முறைதவறி வந்தவர்கள், முறை தவறிப் பேசக்கூடாது, இது அரசியல் நாகரிகம் கிடையாது" என்றும் கூறிக்கொண்டார்.